Category Archives: Uncategorized

அறிவியல் தமிழ் மெய்நிகர் ஆவணக்காப்பகம் – The Scientific Tamil Virtual Library

Updated On 10th October 2017 

சில அடிப்படை கேள்விகள் :

. இந்நூலகத்தின் தன்மை யாது ?இந்நூலகம், காணொளி வடிவங்களில் உள்ள கோப்புகளால் அமைக்கப்பட்ட மெய்நிகர் நூலகமாகும்.

௨. இந்நூலகம் எங்கு அமைந்துள்ளது ? – இந்நூலகம் இணையத்தில் அமைந்துள்ளது.

௩.  இந்நூலகத்தின் அறைகள் எத்தனை ? – 2016 ஆண்டின் கணக்கின்படி சுமார் ஐம்பது அறைகளைக் கொண்ட நூலகமாக இது அமைந்துள்ளது. அனைத்து அறையிலும் தனித்துவக் குறியீடு மூலம் அறியப்படும் கோப்புகள் அமைந்துள்ளன.

௪. இந்நூலகத்தின் இணைய விலாசம் எது ? www.tamilarchives.org , You Tube – Ariviyal Tamil Mandram Channel ; www.ariviyaltamiltv.org ஆகிய மூன்று தளங்களில் இந்த நூலகத்தின் கோப்புகளை காணமுடியும்.

௫. நூலகத்தை காண செலுத்தவேண்டிய சந்தா எவ்வளவு ? – இந்நூலகத்தின் அனைத்து கோப்புகளையும் என்றென்றும் இலவசமாக காண முடியும், பதிவிறக்க முடியும்.

௬. நூலகத்தின் தலைமை நூலகர் யார் ? பேராசிரியர். டாக்டர் .மு.செம்மல்

௭. நூலகம் எப்போது துவங்கப்பட்டது ? 15-06-2012

௮. இவ்வாறானதொரு நூலகத்தை உருவாக்க காரணம் என்ன ?  பண்டைய காலம் முதல் தமிழினம் தனது சுவடுகளை காலத்திற்கு ஏற்ற வடிவங்களில் பதிந்துவைத்து வருகிறது. முதலில், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், காகிதம் என்று இந்த ஆவணங்களின் வடிவம் மாறிக்கொண்டே வருகிறது. அடுத்த நூறு ஆண்டுகளில், மனித இனம் காணொளி வடிவ கோப்புகளை விரும்பி ஏற்கும் என்ற அறிவியல் நுணுக்கத்தை உள்வாங்கிய நிலையில் உருவாக்கப்பட்ட நூலகம் இது. இதன் கோப்புகள், காலம் செல்லச் செல்ல மெருகேறும் மற்றும் சிறப்படையும்.

௯. நூலகத்தை இதுவரை பயன்படுத்தியவர்கள் யார் ?

Total Videos in the Library as on 08th November 2016 – 889 Files

 நாடு வாரியாக உறுப்பினர்கள் பற்றும் பயனாளர்கள்

Country wise Subscribers and Visitor Count for Scientific Tamil Virtual Library

நாடு – உறுப்பினர்கள் [பயனாளர்கள்]

உலகம் முழுவதுமாக – 1626 [221740]      

இந்தியா – 844 [1,16,459]      அமெரிக்கா – 79 [9,421] 
இங்கிலாந்து 38 [4,740]       ஆஸ்திரேலியா 12 [1,956]
கனடா 15 [3,609]          அரபு நாடுகள் 79 [13,029]
சிங்கப்பூர் 54 [7,961]        சவுதி அரேபியா 78 [13,476]
மலேசியா 68 [11,745]        ஜெர்மனி 22 [2104] 
பிரான்ஸ் 30 [4798]         கத்தார் 31 [4663] 
குவைத் 36 [5153]          சுவிட்சர்லாந்து 7 [1,128] 
ஸ்ரீ லங்கா 52 [9,583]        ஓமான் 8 [4,798] 
ஜப்பான் 12 [389]          பிரேசில் 11 [78] 
ரசியா 10 [498]           தென் கொரியா 7 [263] 

Details about Each of the Chamber

மணவை முஸ்தபா அவர்களின் காணொளிகள் – Chamber MMSTVL1

அறிவியல் தமிழ்த் தந்தை என்று போற்றப்படும் மணவை முஸ்தபா அவர்கள் அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு பெரும் பாடுபட்ட அறிஞர். தமிழ் மொழியை செம்மொழியாக இந்தியாவின் நடுவண் அரசு ஏற்பதற்கு தேவையான தகுதிப்பாடுகளை UNESCO ஆவணங்களிலிருந்து கொணர்ந்து தமிழ்ப்பணி செய்தவர். சுமார் எட்டரை லட்சம் அறிவியல் தமிழ் கலைச்சொற்களை நாற்பது ஆண்டுகாலம் Unesco Courier இதழ் மூலம் உருவாக்கியவர். இப்படியானதொரு இணைய நூலகம் உருவாக வித்திட்டவர். அவருடைய காணொளிகள் இந்த அறையில் இடம்பெறும்.

 1. மருத்துவக் கலைக் களஞ்சியம் நூல் வெளியீடு சிறப்புரைஅறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா MMSTVL1AAA (A) (B) (C)
 2. அறிவியல் தமிழே முதல் தமிழ்அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா MMSTVL1AAAD

அறிவியல் தமிழ் அறக்கட்டளை சார்ந்த காணொளிகள்

அறை எண் – MMSTVL2

புதிய கோணத்தில் அறிவியல் செரிவுடன் பணியாற்றி தமிழ் உலகினில் வியத்தகு மாற்றங்களை உருவாக்கும் மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் சிறப்பு மிகு காணொளிகள் இந்த அறையில் இடம்பெறும். 

 1. பன் மொழிகளில் அறிவியல் நூல்கள் டாக்டர்.மு.செம்மல் MMSTVL2AAAA
 2. தமிழ் ஏன் சாகாது தெரியுமா? – டாக்டர்.மு.செம்மல் MMSTVL2AAAB
 3. Medical Journal Club for the Common Man – Tamil Version – Article – 1 – “the beginning MMSTVL2AAAC
 4. Introducing Crowd sourcing in Tamil Based Research HD – Dr.Semmal MMSTVL2AAAD
 5. மெகாசீரியல்தமிழ் சினிமா இரண்டையும் ஒழிக்க வேண்டும்ஏன்? MMSTVL2AAAE
 6. தமிழ் மொழி ஆய்வாளர்களின் மொழி சார்ந்த பிறழ்வான அணுகு முறை மாற வேண்டும்பேராசிரியர். மறைமலை இலக்குவனார் MMSTVL2AAAF
 7. அப்துல் கலாம் அவர்களின் நினைவிடம் சார்ந்த கருத்தியல்பாவலர் பசுளுதீன் MMSTVL2AAAG
 8. திருக்குறள் ஆய்வு மன்றம்அறிமுகம்ராஜ்குமார் பழனிசாமி பரப்புரை HD MMSTVL2AAAH
 9. தமிழர்களின் முகநூல் என்று ஒன்று உருவானால், அது வெற்றி பெறுமா? MMSTVL2AAAI
 10. What is the Decoding the Thirukkural Module all about? MMSTVL2AAAJ
 11. Sexual Harassment in Working Place – How to Counter It? Dr.Semmal (Tamil) – MMSTVL2AAAK
Philocine – பிலோசின் மருத்துவக் கல்வி சார்ந்த காணொளிகள்
அறை எண் – MMSTVL3

பண்டைய இலக்கியங்கள் மூலமாக அறிவியல் குறிப்பாக மருத்துவ அறிவியல் கற்பிக்க முடியும் என்கிற கோட்பாட்டின் அடிப்படையில் டாக்டர்.செம்மல் அவர்களால் 1994 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்வி சார்ந்த துறை பிலோசின்.  தமிழில் துவங்கி அனைத்து பண்டைய உலக மொழிகளிலும் இந்த துறை சார்ந்த ஆய்வுகள் பின் வரும் காலங்களில் மேற்கொள்ளப்படும்.  பிலோசின் துறை சார்ந்த காணொளிகள் இந்த அறையில் இடம்பெறும். 

 1. பிலோசின் துறை என்றால் என்ன ?  MMSTVL3AAAA
 2. திருக்குறளின் அமைப்பில் உள்ள பாட நூலின் தன்மை MMSTVL3AAAB
 3. அடுத்த தலை முறைக்கு திருக்குறளை எப்படி எடுத்துச் செல்வது ? டாக்டர். மு. செம்மல் அளிக்கும் விளக்கம்MMSTVL3AAA (C) (D)
 4. Integrated Linguistic Medical Research in Classical Tamil MMSTVL3AAAE
 5. How and why the concept of Philocine came into existence? MMSTVL3AAAF
 6. Integrated Linguistic Medical Research in Classical Tamil – Philocine – MMSTVL3AAAG

 சைபர் தமிழ் சங்கம் சார்ந்த காணொளிகள்

அறை எண் – MMSTVL4

தமிழில் பேசியும் எழுதியும் மட்டுமே தமிழ் வளர்க்க முடியும் என்கிற கோட்பாட்டின் சுவர்களை மீறும் குழுமம் இது. தமிழர்கள்தான் ஆனால் தமிழில் எழுத அல்லது பேச அல்லது படிக்கத் தெரியாது என்று தமிழை விட்டு விலகி நிற்கும் தமிழர்களை தமிழின் பக்கம் மெல்ல மெல்ல கொணரும் தளம் இது, சைபர் தமிழ் சங்கம் சார்ந்த காணொளிகள் இந்த அறையில் இடம்பெறும்.  

 1. Welcome to the Cyber Tamil Sangam (Tamil Version)     MMSTVL4AAAA

 இருபதாம் நூற்றாண்டில் பிறந்த
தமிழறிஞர்களின் வாழ்க்கைப் பதிவுகள்
அறை எண் – MMSTVL5

      மொழியின் உயிர் போன்றவர்கள் மொழியியல் அறிஞர்கள். மொழியை கருவியாகப் பயன்படுத்தி பெரும்பான்மையான மக்கள் வாழும் நிலையில் மொழியை தாயாக, தலைவனாக, உயிராக கருதும் அறிஞர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள். தமிழ் உலகின் சிறப்பிற்கு உரியவர்கள், இருப்பினும் பெரும்பான்மையான ஊடகங்களின் காணாமுகத்தால் எதிர்பார்க்கும் அளவிற்கு வெளியே தெரியாத நிலையில் பெரும் சிரமத்திற்கு இடையே அமைதியாக தமிழ்த்தொண்டை ஆற்றி வருகின்றனர். இவர்களைப் பற்றிய வாழ்க்கைப் பதிவுகளை “பிறந்த காலம், பிறந்த ஊர்,படித்த பள்ளி, கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள், செய்த தொழில், வாழ்ந்த நிலப்பகுதி, கவர்ந்த இலக்கியம், பயன்படுத்தும் மொழி நடை, உடல் மொழி, பெற்ற குரல், அவர்களின் உடலின் அமைப்பு, அடுத்த தலைமுறைக்கு அவர்கள் கூற விழையும் செய்தி, செய்துள்ள தமிழ்ப்பணிகள்”, இவ்வாறான தகவல்களை எவ்வித பாரபட்சமும் இல்லாது, குழு மனப்பான்மையும் இல்லாது, ஜாதி அரசியலுக்கு அப்பாற்பட்டு இயங்கி ஒரு பொதுவான இடத்தில் என்றும் உலக மக்கள் இலவசமாக காணும் நிலையில் காணொளிக் கோப்புகளாக இருத்துவதே இந்த அறையின் நோக்கமாகும்.

       இன்றைய தமிழ் உலகம் பிரிந்து நிற்கிறது, பல்வேறு காரணங்கள் இதற்குண்டு. காரணங்களை நிவர்த்தி செய்யவது சுலபமல்ல. அரசியல் பிளவுகளைத் தாண்டி, ஜாதி பிரிவுகளைத் தாண்டி, குழு மனப்பான்மையின் சிறுமையைத் தாண்டி….. ஒருமித்த குறிக்கோளுடன் செயல்பட்டு… நாளைய தமிழ் உலகம் பயன்பெற ஒரு ஆவணக் காப்பகமாக இது விளங்கும்.

 1. மணவை முஸ்தபா MMSTVL5AAAA
 2. திரு.கரந்தை இராமநாதன் MMSTVL5AAA (B) (C) (D)
 3. திரு. மு. கலைவேந்தன் MMSTVL5AAA (E) (F) (G)
 4. திரு. சண்முக செல்வ கணபதி    MMSTVL5AAA  (H) (I) (J) (K)
 5. திரு.கரந்தை காளிதாசன் MMSTVL5AAAA  (L) (M)
 6. கவிஞர். புதுச்சேரி  ஹுசைன்       MMSTVL5AAAN
 7. திரு. லெனின் தங்கப்பா,புதுச்சேரி MMSTVL5AAAO
 8. முனைவர் இரா. சம்பத், புதுச்சேரி                        MMSTVL5AAAP
 9. முனைவர் .மா.இளங்கோவன், சென்னை MMSTVL5AAAQ
 10. திரு.பழனி – சென்னை MMSTVL5AAAR
 11. திரு. சுப்ரமணியன் MMSTVL5AAAS
 12. திரு. பரமசிவம் MMSTVL5AAAT
 13. தமிழருவி மு.பா. இராமலிங்கம் MMSTVL5AAAU
கல்லூரி மாணவர்களின் அறிவியல் உரைகள்
அறை எண் – MMSTVL6

கல்லூரி மாணவர்கள் தங்களுடைய அறிவியல் பேசும் திறமைகளை வெளிப்படுத்தும் களம் இது, ஆங்கிலத்தில் அவர்கள் உருவாக்கும் காணொளிகள் இந்த அறையில் இடம்பெறும்.  

1. Sports Performance and Vitamins – Vitamin C and E by Dr. Karan Jain (தமிழ்) MMSTVL6AAAA

2. Understanding the Pathophysiology of Headache among Trekkers V.Srinivasan (தமிழ்) MMSTVL6AAAB

 மணப்பாறை முறுக்கு
அறை எண்– MMSTVL7

மாணவர்கள் உருவாக்கும் அறிவியல் தமிழ் காணொளிகள் இவை. சிறு சிறு பதிவுகளாக அமையப்பெறும் இவை தனியாக ஒரு பெரும் அறிவியல் தமிழ் காணொளிக் குவியலாக உருவாகும் என்பதில் ஐயமில்லை. அனைத்து மாணவர்களுக்கும் இதில் பங்குகொள்ள வாய்ப்பு கொடுக்கப்படும், சிறப்பாக பேசும் மாணவர்கள் மேன்மேலும் காணொளிகளை உருவாக்கி சிறப்பர்.   

 1. பூஞ்சைகள் – Fungus HD – MMSTVL7AAAA
 2. கழிவு மேலாண்மை – Waste Management HD – MMSTVL7AAAB
 3. டீ இலைகள் – Tea Leaves – MMSTVL7AAAC
 4. துரித உணவுகள் – Fast Foods – MMSTVL7AAAD
 5. அமில மழை – Acid Rain – MMSTVL7AAAE
 6. Ebola Virus – எபோலா நச்சுயிர்MMSTVL7AAAF
 7. Spirulina – கடற்பாசி HD – MMSTVL7AAAG
 8. Zika Virus -ஜிகா நச்சுயிர் HD – MMSTVL7AAAH

 

எளிய தமிழில் மருத்துவக் கல்வி
அறை எண்–MMSTVL8

மருத்துவக் கல்வி முழுவதுமாக இந்த அறையில் காணொளி வடிவில் மருத்துவ மாணவர்களுக்கு மற்றும் நோயாளிகளுக்கு பயன்தரும் நிலையில் இருத்தப்படும். மருத்துவ பேராசிரியர்கள் உருவாக்கும் காணொளிகள் இந்த அறையினுள் இருத்தப்படும். “என்றோ ஒரு நாள்…” தமிழில் MBBS கற்பது சாத்தியமானால் இந்த தளம் அதற்கு பெரும் துணையாய் இருக்கும். 


பல்துறை ஆங்கில வழி மருத்துவர்களின் காணொளிகள்
அறை எண் – MMSTVL9

ஆங்கில மருத்துவர்கள் பலர் தமிழார்வம் கொண்டிருப்பது சிறப்பு. அவர்களின் பொதுவான மருத்துவப் பணிகளுக்கு இடையே சிறு சிறு பதிவுகளாக உருவாக்கும் அறிவியல் தமிழ் மருத்துவக் காணொளிகள் இவை. அனைத்து மருத்துவத் துறைகளுக்கும் இந்த அறையில் இடம் உண்டு.   

 1. வெப்ப அழுத்தம் என்றால் என்ன? –Dr. கிருஷ்ணன் – MMSTVL9AAAA
 2. ஜிகா நச்சுயிர்– Dr. ஸ்ரீதர் – MMSTVL9AAAB
 3. சிறுநீரக மருத்துவம் டாக்டர். சௌந்தரராஜன் MMSTVL9AAA (C) (D) (E) (F)

 

உடற் கல்வி மருத்துவம்  – Sports Medicine in Tamil
அறை எண் – MMSTVL10

உடற்கல்வி சார்ந்த மருத்துவம் உலக அளவினில் மிகவும் வேகமாக முன்னேறிவரும் துறையாகும்.  இத்துறை சார்ந்த செய்திகள் தமிழ் மொழியில் மிகவும் குறைவாக உள்ளன. இத்துறை சார்ந்த காணொளிகள் இந்த அறையில் காணப்படும். தமிழர் விளையாட்டு சார்ந்த பதிவுகளுக்கும் இந்த அறையில் இடம் உள்ளது.  

 1. Integration between Medical, Engineering and Physical Education Students (தமிழ்) – MMSTVL10AAAA
 2. Launch of Virtual Mode of presentation in Physical Education Conferences in Tamilnadu (தமிழ்) – MMSTVL10AAAB
 3. தமிழர் விளையாட்டின் நோக்கம் என்ன? – திரு. முகமது கடாபி MMSTVL10AAAC
 4. தமிழ் அமைப்புகள் தமிழர் விளையாட்டை ஏற்க வேண்டும்  திரு. முகமது கடாபி MMSTVL10AAAD
 5. Autism நோயும் தமிழர் விளையாட்டும்திரு. முகமது கடாபி MMSTVL10AAAE
 6. தமிழர் விளையாட்டின் முக்கியத்துவம் திரு. முகமது கடாபி MMSTVL10AAAF
 7. Lactic Acidosis Explained in Tamil – Dr.Krishnakumar – MMSTVL10AAAG
ஆங்கிலம் மூலமாக பண்டைய தமிழ் இலக்கியங்களை நாளைய உலகிற்கு இயம்பும் காணொளிகள்
Applied Tamil Videos
அறை எண் – MMSTVL11

This Chamber contains videos which explains Ancient Tamil Literary works in depth in 100 % English, the idea is to blast open the doors that are used to suppress and oppress the rich Tamil Heritage from the greater world, this is a path breaking venture and is one of the prime elements of the Scientific Tamil Foundation Trust activity.  

 1. Thirukkural is Written Based on the Principles of Neurobiology – MMSTVL11AAAA
 2. Exploring the Scientific Basis of Thirukkural 129 – MMSTVL11AAAB
 3. Learn Neurobiology to Understand Thirukkural – – MMSTVL11AAAC
 4. Understanding Thirukkural 129 Based on Theories of Sir Charles Darwin HD – – MMSTVL11AAAD
 5. Understanding Thirukkural 129 Based on Theories of Sigmund Freud HD – – MMSTVL11AAAE
 6. Neurobiological Basis of Thirukkural Numbered 0129 HD – – MMSTVL11AAAF
The Great Indian Gene Student Educational Videos in English 
அறை எண் – MMSTVL12

Educational videos by Medical Students across various streams of science, this chamber paves way for the student community to express its oratory skills aloud to the world. 

 1. Domestic Violence Among Indian Women – Ms.Shruthi – MMSTVL12AAAA
நவீன தமிழ் இலக்கியத்தின் மூலம் அறிவியல் கற்பித்தல்
அறை எண் – MMSTVL13

இலக்கியத்தால் அவ்விலக்கியத்தைப் பெற்ற சமூகத்திற்கு இலக்கியத்தை மீறியதொரு பயன்பாடு உள்ளது. நவீன தமிழ் இலக்கியங்களான மகாகவி பாரதியார் பாடல்கள் முதல் கவியரசு வைரமுத்து பாடல்கள் வரை அனைத்தும் அறிவியல் கற்பிக்கும் ஆயுதங்களாக தமிழ் சமூகத்திற்கு பயன்படும் என்பதை நிரூபிக்கும் தளம் இது.  

 1. பாரதியார் பாடல்கள் மூலம் அறிவியல் வகுப்புகள்MMSTVL113AAA
உள மருத்துவம் (Psychosomatic Medicine in Tamil)
அறை எண் – MMSTVL14

அதி நவீன மருத்துவத் துறையான உள மருத்துவத் துறை  சார்ந்த காணொளிகள் இந்திய மொழிகளிலேயே தமிழில் மட்டுமே முதலில் வெளியாகும் என்கிற சிறப்பை தமிழுக்கு கொணரும் தளம் இது.

 1. மன அழுத்தமும் சர்க்கரை நோயும் – டாக்டர்.மு.செம்மல் – MMSTVL14AAAA
 2. Milestones என்றால் என்ன?   – டாக்டர்.மு.செம்மல் – MMSTVL14AAAB
 3. உள மருத்துவம் என்றால் என்ன?  – டாக்டர்.மு.செம்மல் – MMSTVL14AAA [C] [D] [E]
 4. மருத்துவர்களை நம்புங்கள்  – ஏன்?  – டாக்டர்.மு.செம்மல் – MMSTVL14AAAF
 5. உடலியக்கவியல் என்றால் என்ன? – டாக்டர்.மு.செம்மல் – MMSTVL14AAAG
 6. இனிய தமிழில் உள மருத்துவம் பகுதி ஒன்று – MMSTVL14AAAH
முற்றோதல்திருக்குறள்
அறை எண் – MMSTVL15

உலகில் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் தமிழ் இலக்கியங்களை முழுதும் கேட்டு கண்டு சுவைக்க வகை செய்யும் தளம் இது. Project Thirukkural Malar et al என்ற பெயர்கொண்டு செயல்படும் இந்த தளம் அற்புத மாற்றத்தை தமிழ் இலக்கிய நோக்கில் உருவாக்கும்.

 1. Project Thirukkural Malar et al – 15 Videos as on June 2016 – MMSTVL15AAAA To MMSTVL15AAAO Completed
முற்றோதல்திருவருட்பா
அறை எண் – MMSTVL16

வடலூர் இராமலிங்க அடிகளார் இயற்றிய திருவருட்பா பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஆழமான ஆன்மீக உணர்வுகளை தன்னுள்ளே கொண்ட அழகிய இலக்கியமாகும்.  சன்மார்க்கத்தை சார்ந்த மக்கள் மட்டுமே நித்தமும் படிக்கும் நிலையிலிருந்து மருவி அனைத்து தமிழர்களும் படித்து பயன்பெறும் நிலையை உருவாக்கிட திருவருட்பாவின் அனைத்து பாடல்களையும் காணொளி வடிவில் உருவாக்கும் பெரும் திட்டத்தின் வெளிப்பாடு இது.

முற்றோதல்சீறாப்புராணம்
அறை எண் – MMSTVL17

இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்கிற ஒற்றை காரணத்தால் பொதுவான தமிழ் ஆய்விலிருந்து ஓரம்கட்டப்பட்ட அற்புத இலக்கியம் சீறாப்புராணம். நவீன உலகில் எவ்வித அழுத்தங்களுக்கும் இடமில்லை. அனைத்து சீறாப்புராண பாடல்களையும் காணொளிப்பதிவு செய்யும் பெரும் பணி இது.   

இளையராஜாவின் பாடல்களில் உளவியல் கூறுகள்
அறை எண் – MMSTVL18

இசைஞானி இளையராஜா இசையமைத்து தமிழ் சினிமாவை தனது இசை மலையில் நனைத்து காலங்களில் வெளியான பாடல்கள் தமிழ் மக்களால்  கோடானுகோடி முறைகள் கண்டு களிக்கப்பட்டன என்பது உண்மை. அப்பாடல்களில் உள்ள ஜீவன் அற்புத சக்தி வாய்ந்தது. அவற்றை இலக்கிய உளவியல் சிந்தனைகள் கொண்டு வருடி விளையாடும் தளம் இது.

 1. உச்சி வகுந்தெடுத்து – MMSTVL18AAAA
தமிழ் கூரியர் காணொளிகள்
அறை எண் – MMSTVL19

http://tamilcourier.blogspot.in/

ஆசிரியர்கள் செய்திகளை உருவாக்குவர்; மாணவர்கள் செய்திகளை வாசிப்பர்; உலகின் முதல் அறிவியல் தமிழ் செய்திகள் காணொளிகள்

பல தொலைக்காட்சி நிறுவனங்கள் தமிழ்கூறும் நல் உலகத்தில் இருந்தாலும் அறிவியல் தமிழுக்கு அவை கொடுக்கும் முக்கியத்துவம் மிகச் சிறியதே, மக்களுக்கு எதனைக் கொடுக்கவேண்டுமோ அதனைக் கொடுப்பதே ஊடகத்தில் பணியாக இருத்தல் வேண்டும். அறிவியல் தமிழ் செய்திகளை அறிவியல் துறை ஆசிரியர்கள் உருவாக்க மாணவர்கள் வாசிக்க மாபெரும் அறிவியல் தமிழ் புரட்சியாக இந்தக் காணொளிகள் திகழும்.  

 1. தமிழ் கூரியர் – ஓர் அறிமுகம் HD – MMSTVL19AAAA
 2. இதய தசையின் நெகிழும் தன்மை   HD – MMSTVL19AAAB
 3. செய்கை மொழி ஆராய்ச்சி HD – MMSTVL19AAAC
 சினிமா மூலம் மருத்துவக் கல்வி
அறை எண் – MMSTVL20

தமிழ் சமூகத்தை பிறழ்வு அடைய வாய்த்த மிகப்பெரிய சக்தி தமிழ் சினிமா. முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும் என்பது போல, கெடுதல் செய்த சினிமாவைக் கொண்டே தமிழ் உலகிற்கு அறிவியல் கற்பிக்கும் தளம் இது. சினிமா மூலம் அறிவியல் என்ற கோட்பாடு உலக மொழிகளில் தமிழில் மட்டுமே காணப்படுகிறது என்பது சிறப்பு.     

 1. உதிரிப்பூக்கள் – MMSTVL20AAAA
 2. Terminator – MMSTVL20AAAB
 3. காற்றில் வரும் தீபம் – MMSTVL20AAAC
 4. வைதேகி காத்திருந்தாள் – MMSTVL20AAAD
நிலாச்சோறு காணொளிகள்
அறை எண் – MMSTVL21

பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நிலாச்சோறு அமைப்பை நவீன உலகில் கொணரும் அமைப்பு இது. அறிஞர்கள் நிலாவின் ஒளியில் கூடிப்பேசுவர், பேசும் அனைத்தும் பதிவுகளாக பதியப்படும். அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, மலேசியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வாழும் தமிழர்கள் இந்த முறைமையில் இதுவரை பங்குகொண்டுள்ளனர். முப்பது நிகழ்வுகளைத் தாண்டி முன்னேறும் நிலாச்சோறு இனிமையான  அனுபவமாகும். மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் மாடிப் பூங்காவில் நிகழ்வுகள் மாதா மாதம் நடத்தப்படும்.  

 1. வலைத் தமிழ் பார்த்தசாரதி அறிமுகம் – MMSTVL21AAAA
 2. வட அமெரிக்காவில் தமிழின் நிலை (2014) – MMSTVL21AAAB
 3. தமிழ் நாட்டில் கல்வி தமிழர் அறிவியல் சார்ந்து இருப்பதன் அவசியம் HD – MMSTVL21AAAC
 4. தமிழர் அறிவியல் தாழ்ந்த நிலையை அடைந்தது ஏன் ? – MMSTVL21AAAD
 5. அமெரிக்காவில் தமிழர் மருத்துவத்தை வெற்றிகரமாக செய்வது எவ்வாறு? – வலைத் தமிழ் பார்ததசாரதி HD – MMSTVL21AAAE
 6. தமிழ் மீது அமெரிக்க தமிழர்களின் கருத்தியல் என்ன? (2015 Update) – வலைத் தமிழ் பார்த்தசாரதி HD – MMSTVL21AAAF
 7. தமிழர் மருத்துவம் மீது அமெரிக்க தமிழர்களின் கருத்தியல் என்ன? (2015 Update) – வலைத் தமிழ் பார்த்தசாரதி HD – MMSTVL21AAAG
 8. தாய் மொழிக் கல்வியின் அவசியம் HD – MMSTVL21AAAH
 9. பேராசிரியர் காந்திதுரை, மதுரை HD – MMSTVL21AAAI
 10. வள்ளலாரின் தனித்துவம் HD – MMSTVL21AAAJ
 11. சிலை வணக்கம் பற்றி வள்ளலார் கூறியது என்ன? HD – MMSTVL21AAAK
 12. யோகம் தமிழர்களுக்கு சொந்தமானது – MMSTVL21AAAL
 13. தமிழ் இளைஞர்களை யோசிக்க விடுங்கள்  – திரு. அழகப்பா ராமமோகன் – MMSTVL21AAAM
 14. தமிழ் இந்துக்களின்  புனித நூல் எது? – பொறியாளர் சதாசிவம் HD – MMSTVL21AAAN
 15. மதுவை எதிர்த்து தமிழ் இளைஞர்கள் எழுந்து நிற்க வேண்டும் HD – MMSTVL21AAAO
 16. நிலாச்சோறு நிகழ்வுகள் என்றால் என்ன? – டாக்டர்.மு.செம்மல் விளக்கம் – MMSTVL21AAAP
 17. தமிழ் மீது புதிய அணுகு முறை பிறந்திட வேண்டும் – MMSTVL21AAAQ
 18. எது ஒழுக்கமான வாழ்க்கை? – MMSTVL21AAAR
 19. திருமதி ஹாஜி குர்ஷித் பேகம் அவர்களின் கல்வி வாழ்க்கை – MMSTVL21AAAS
 20. திருமதி குர்ஷித் பேகம் அவர்களின் கல்விப் பணி- MMSTVL21AAAT
 21. தமிழ் சமூகத்தில் காணப்படும் மன நோய்கள் – MMSTVL21AAAU
 22. வெளி நாடுகளில் வாழ்பவர்களிடம் குடும்பத்தார்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? – MMSTVL21AAAV
 23. மன நிம்மதிக்கு இறைவனிடம் உண்மையாக சரணடையுங்கள் – MMSTVL21AAAW
 24. தமிழகத்தில் அறிஞர்கள் பிளவுபட்டு இருப்பதன் விளைவு என்ன? – MMSTVL21AAAX
 25. தமிழ் எழுத்துகள் உச்சரிப்பும் எண்ணிக்கையும் – MMSTVL21AAAY
 26. தமிழர் ஆன்மீகத்தின் தனித்துவம் என்ன? – MMSTVL21AAAZ
தமிழ் வணிகம் சார்ந்த காணொளிகள்
அறை எண் – MMSTVL22

பொருள் சிறப்பு நிரம்பிய சமூகங்கள் தழைக்கும், மற்றவை கை ஏந்தி அடிமைகளாக குனிந்து நிற்கும். இது எதார்த்தம். தமிழ் வணிகர்கள் வெற்றி பெற்றால் அது பல்லாயிரம் அரசர்கள் தமிழ்ப்பணி செய்வதற்கு சமமாகும், புரவலர்கள் இல்லாத இடத்தில் புலவர்கள் செழிப்பது கனவு.       

சன்மார்க்கம் பற்றிய காணொளிகள்
அறை எண் – MMSTVL23

தமிழ் சமூகம் மது , ஜாதி உணர்வு, மூட நம்பிக்கை போன்ற இடர்ப்பாடுகளிலிருந்து வெளியாக சன்மார்க்கம் அனைத்து தமிழரையும் சென்றடைய வேண்டும், அப்பணியை இந்த தளம் மேற்கொள்ளும்.   

Medical Education by Medical Students (English) 
அறை எண் – MMSTVL24

Medical Students are the end users of Medical Education, this makes them as the best source to make medical education as well, this chamber will be filled by Educational videos made by Medical Students for the use of other Medical Students, this will be assisted by the Universal mentoring Concept devised and developed by Professor.Dr.Semmal    

Medical Education in Tamil
அறை எண் – MMSTVL25

மருத்துவ மாணவர்கள் உருவாக்கும் பிற மருத்துவ மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கண்டு பயன்பெறும் காணொளிகள் இவை.

காலம் தேடும் கலாம்கள்
அறை எண் – MMSTVL26

மாணவர்கள் அறிவியல் தமிழ் பேசுவதை போட்டியாக பாவித்து சான்றிதழ் கொடுத்து ஊக்கப்படுத்தும் அறிவியல் தமிழ் மெய்நிகர் பேச்சுப் போட்டிகளின் மூலம் கிடைக்கப்பெறும் காணொளிகள் இந்த அறையினுள் இருத்தப்படும். 

பிற மொழிகளில் அறிவியல் காணொளிகள்
அறை எண் – MMSTVL27

அறிவியல் தமிழ் இணையத் தொலைக்காட்சியின் வளர்ச்சிப் பாதையில் துணை செய்யும் பிற மொழி அறிவியல் அறிஞர்களுக்கு நன்றி கூறும் விதத்தில் அவர்களையும் பதிவு செய்து வைக்க வேண்டிய சூழல் உள்ளது. யாதும் ஊரே யாவரும் கேளீர், யாதும் மொழிகளே யாவரும் கேளீர்.    

ஆயுர்வேத  மருத்துவக் காணொளிகள்
அறை எண் – MMSTVL28

ஆயுர்வேத மருத்துவம் சார்ந்த காணொளிகள் இந்த அறையினுள் இருத்தப்படும்.    

சிந்த மருத்துவக் காணொளிகள்
அறை எண் – MMSTVL29

சித்த மருத்துவம் சார்ந்த காணொளிகள் இந்த அறையினுள் இருத்தப்படும்.   

யுனானி மருத்துவக் காணொளிகள்
அறை எண் – MMSTVL30

யுனானி மருத்துவம் சார்ந்த காணொளிகள் இந்த அறையினுள் இருத்தப்படும்.   

இனிய தமிழில் உள மருத்துவம்
அறை எண் – MMSTVL31

மனித உடலுக்கும் மனித மூளைக்கும் இடையே நிகழும் மிக நுண்ணிய  பரிமாற்றங்கள் மிகவும் சுவாரஸ்யமானவை அவை சார்ந்த காணொளிகள் இந்த அறையினுள் இருத்தப்படும்.   

Anna Nagar Islamic Centre
அறை எண் – MMSTVL32

சென்னையில் உள்ள அண்ணா நகரில் உள்ள அண்ணா நகர் இஸ்லாமிய மையத்தின் உறுப்பினர்கள்  உருவாக்கும் சமூக நலம் காக்கும் காணொளிகள் இந்த அறையினுள் இருத்தப்படும்.   

தமிழாய்வுக்கு ஒரு நிமிடம் (1m4tr)
அறை எண் – MMSTVL33

நவீன உலகில் வாழும் மனிதர்களுக்கு உண்மையிலேயே நேரமில்லை. எதையும் சட்டென நேரடியாக சென்றடைய விரும்பும் மனநிலை இன்றைய மனிதர்களுக்கு உள்ளதுஇனி வரும் காலங்களில் இந்த வேகம் மேலும் அதிகரிக்கும்; மனித இனத்தின் இந்த உளவியல் தன்மையை உள்வாங்கிய நிலையில் உறவாக்கப்பட்டதே இந்த தளம், இதில் இடம்பெறும் அனைத்துக் காணொளிப்பதிவுகளும் ஒரு நிமிடம் மட்டுமே நீளும். நாளைய தமிழ் பட்டதாரிகளுக்கு பாடநூலாக இந்தக் காணொளிகள் அமையும் என்பது திண்ணம்.   

நவீன உலகில் தமிழாய்வு
அறை எண் – MMSTVL34

அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைத்தால், மாவு மென்மையாகும் ஆனால் சற்று புளித்தும் போகும் – தமிழ் ஆய்வுகளை நவீன உலகின் தன்மைக்கு ஏற்ப அறிவியல் செறிவுடன் மேற்கொள்ள வேண்டும் இவ்வாறான தன்மையுடைய காணொளிகள் இந்த அறையினுள் இருத்தப்படும்.   

 பேராசிரியர் டாக்டர். செம்மல் எழுதிய நூல்கள் பற்றி
அறை எண் – MMSTVL35

2016 ஜூன் மாதம் நிலைப்படி, எட்டு நூல்களை எழுதியுள்ள மருத்துவர். செம்மல் அவர்களின் நூல்கள் பற்றிய காணொளிகள் இந்த அறையினுள் இருத்தப்படும்.   

தமிழர் சரித்திரம்
அறை எண் – MMSTVL36

தமிழரின் சரித்திரம் உண்மையில் மனித இனத்தின் சரித்திரமே. உண்மைக்கு என்றும் ஆபத்துள்ளது, தமிழரின் சரித்திரத்திற்கும் இந்நிலை என்றும் உள்ளது. உண்மைக்கு உழைக்கும் காணொளிகள் இந்த அறையினுள் இருத்தப்படும்.    

   The Great Indian Gene Videos
அறை எண் – MMSTVL37

Archive Videos about the Life of Elders (aged above 60) of Indian Origin will be placed here. This digital repository is of National Significance

பிரான்ஸ் தமிழர்கள்
அறை எண் – MMSTVL38

பிரான்ஸ் நாட்டில் வாழும் தமிழர்களின் காணொளிகள் இந்த அறையினுள் இருத்தப்படும்.   

சிங்கப்பூர் தமிழர்கள்
அறை எண் – MMSTVL39

சிங்கப்பூர் நாட்டில் வாழும் தமிழர்களின் காணொளிகள் இந்த அறையினுள் இருத்தப்படும்.   

Universal Mentoring Videos by Prof.Dr.Semmal
அறை எண் – MMSTVL40

Teachers without Frontiers Concept is explored by Dr.Semmal, Educational Videos placed here will be of use to the entire Student Diaspora across the Globe.     

டாக்டர். மு. செம்மலின் உலகினுள் 1 நிமிடம்
அறை எண் – MMSTVL41

மெய் சிலிர்க்கும் அறிவியல் காணொளிகள், இதுவரை தமிழ்,உலகம் கண்டிராத கோணத்தில் உருவாக்கப்படும் காணொளிகள்  இந்த அறையினுள் இருத்தப்படும்.   

Biomedical Engineering in Tamil & English
அறை எண் – MMSTVL42

Biomedical Engineering Videos Explaining the concepts that glues Engineering and Medicine will be dealt in here.  Certificates will be issued to the participants.  

ஆன்மீக அறிவியல்
அறை எண் – MMSTVL43

ஆன்மிகம் மனித இனத்திற்கு நல்லது. ஆன்மீகத்தை அறிவியலுடன் இணைப்பது அறிவியலுக்கு பாதுகாப்பினைத் தரும். ஆன்மீக அறிவியல் சார்ந்த  காணொளிகள்  இந்த அறையினுள் இருத்தப்படும்.   

இஸ்லாம் சார்ந்த காணொளிகள்
அறை எண் – MMSTVL44

இஸ்லாமிய மார்க்கம் சார்ந்த காணொளிகள்  இந்த அறையினுள் இருத்தப்படும்.   

 

இஸ்லாமியத் தமிழ் எழுத்தாளர்கள்
அறை எண் – MMSTVL45

எழுதும் திறம் இறைவன் கொடுத்த கோடை, அறிய திறன். நம் சமூகத்தில் இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர்கள் பலர் உள்ளனர், இருப்பினும் தொடர்ந்து அவர்களின் திறமைகள் தமிழர்களின் பொதுவான சரித்திரத்தில் அவற்றிற்குரிய இடத்தைப் பெறவில்லை. பற்பல சமூகவியல் காரணிகள் இதற்கு உண்டு. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே ஒரு சமூகத்தில் சிந்தனையாளர்கள் இருப்பார்கள் என்பது அறிவியலுக்கு எதிரான கூற்றாகும். ஊடகங்கள் கவனிக்கத் தவறிய சிறப்புகளை மீட்டெடுக்க வேண்டியது பொறுப்புள்ள அமைப்புகளின் கடமை. தமிழ் முஸ்லீம்களின் எழுத்துத் திறமையை உலகிற்கு பறைசாற்றும் தளம் இது. .   

இருபதாம் நூற்றாண்டு தமிழாசிரியர்கள்
அறை எண் – MMSTVL46

ஆசிரியர்கள் சமூகத்தின் காப்பாளர்கள், பெரும் ஊடகங்கள் கூர்மையான சிந்தனைகொண்ட ஆசிரியர்களை ஓரம்கட்டிவிட்டு, சிரிப்பு ஆசிரியர்களை முன்னிறுத்துவது தமிழ் சமூகத்தை காமெடி இனமாக நாளடைவில் மாற்றிவிடும். சிறப்பான  கருத்துகளை உடைய ஆசிரியர்களின்  காணொளிகள்  இந்த அறையினுள் இருத்தப்படும்.   

தமிழறிஞர்களின் தமிழ் சார்ந்த உரைகள்
அறை எண் – MMSTVL47

மாபெரும் தமிழ் அறிஞர்கள் தமிழ் மொழி பற்றியும் தமிழ் இலக்கியம் பற்றியும் இயம்பும் ஆழமான கருத்துகள் காணொளி வடிவாக இந்த அறையில் இடம்பெறும்.  

தமிழாய்வுக்கு 1 நிமிடம் – அறை எண் – MMSTVL103
தமிழ் ஒரு உலக மொழி - ஒரிசா பாலு அளிக்கும் விளக்கம்  MMSTVL103AAAA 

பல மொழிகளில் தமிழின் தாக்கம் உள்ளது MMSTVL103AAAB 

கிரகணம் . தமிழர்கள் பயன்படுத்திய சொல் எது? MMSTVL103AAAC
பரமத்தி வேலூர் அருகிலுள்ள மேல்சித்தர் பூண்டியின் மண் நிலவின் மண்ணா ? MMSTVL103AAAD  

 

பக்தி இலக்கியங்கள் தமிழில் தோன்றிய காலம் எது ? MSTVL103AACC